Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 OCT 1950
இறப்பு 13 FEB 2021
அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (யேசு)
வயது 70
அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி 1950 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 47 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைதீவு முத்து ஐயன் கட்டு வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஆனாலும்
 உள்ளம் எல்லாம் தேம்புதையா
 மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!

ஆண்டுகள் ஒன்று
 ஓடி மறைந்தது அப்பா
 ஆனாலும் எங்கள் கண்களில்
 வழிந்தனீர் காயவில்லையே!

எம்முயிரான எங்கள் அப்பாவே!
 நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஓராண்டு கடந்து விட்டாலும்
 நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை
காணிக்கையாக்குகிறோம்...

தகவல்: குடும்பத்தினர்