

யாழ். புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைதீவு முத்து ஐயன் கட்டு வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, தனபாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்பையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகபூபதி(திலகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமகுமாரி(இலங்கை), ஜெயக்குமாரி(இலங்கை), காலஞ்சென்ற உதயசூரியன் மற்றும் சிவசூரியன்(பிரான்ஸ்), தனசூரியன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, விநாயகமூர்த்தி, சத்தியமூர்த்தி, ஆனந்தமூர்த்தி, சுந்தரமூர்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தி(புங்குடுதீவு), நல்லைவாசன்(கனடா), மணிமேகலை(புங்குடுதீவு), கண்ணகி(கொக்குவில்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை மற்றும் கமலா, மனோரஞ்சிதம், புவனேஸ்வரி, கனகலிங்கம், கமலாநேரு, வசந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வள்ளிநாயகி, ராசாங்கம் ஆகியோரின் அன்பு சகலனும்,
தயாளநேசன், ஜேசுநேசன், ஜெயந்தி, தபோதினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மெர்சிகா மற்றும் டிக்சன், டிலக்ஷிகா, ஒலிவியா, ஜெயரூபன், இவாஞ்சலின், சாகித்தியன், சகானா, சனுஜா, தாரகை, தார்மிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.