Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 03 NOV 1972
மறைவு 27 MAY 2024
திரு தம்பிராசா ஜெயராசா (ராசன்)
வயது 51
திரு தம்பிராசா ஜெயராசா 1972 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா ஜெயராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் தான் 31 ஆனதுவோ
உன் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை..!
பாசம் என்னும் பிணைப்பிலே இணைந்திருந்த
எம்மைவிட்டு எங்குதான் சென்றாயோ

உன் சிரித்த முகமும் சிந்தனையான பேச்சும்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை
நீ கொண்ட இலட்சியமும்
இல்லறம் மீது கொண்ட பாசமும்
உன்முன் வியாபித்து இருக்க
எங்குதான் சென்றுவிட்டாய்..?

காத்திருக்கின்றோம் விழிகளில் நீர்வடிய
வருவாயா எமைத் தேடி..?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரரத்திக்கின்றோம்
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

திரு. தம்பிராசா ஜெயராசா (ராசன்) அவர்களின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 24.06.2024 திங்கட்கிழமை Walton Bridge புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிரியைகள் 25.06.2024 செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து மதியம் 12.00மணி தொடக்கம் 5.00மணிவரை Bedzed Pavillon No.24, Sandmartin Way Wallington Surrey SM6 7DF ல் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். Bezed Pavillon Community Center, No.24, Sandmartin Way, Wallington, Surrey SM6 7DF.

நன்றி

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்