வசந்தன் அண்னா, நான் 1995 இல் இங்கிலாந்தில் இருந்து கனடாவிற்கு வந்த காலத்தில் இருந்து உங்களை என் மாமனாரின் இனிய நண்பனாக, பொறியியல் துறையில் கலானிதி வசந்தகுமாராக, பிரபல கணனித்துறைசார் த்னியார் பாடசாலை ஸ்தாபகரில் ஒருவராக, ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரியின் பளைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் ஸ்தாபகரில் ஒருவராக, தலைவராக, வானவில் நிகழ்வின் ஸ்தாபகர், தலைவர் மற்றும் ஒருங்கமைப்பாளர்களில் ஒருவராக, சிறந்த வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்வுகளின் பங்குபெற்றுபவராக, சமூக நிலமைகளின் ஆய்வாளராக, நாடு சம்பந்தமான விடயங்களை யதார்த்தமாக பார்த்து கருத்தாடுபவராக என்ற பற்பல நல் முகத்தோனாக 2021 வரை உங்களை பார்த்துவந்த நான் உங்களிடம் நிறையவே அன்பும் பண்பும் நிறைந்த சிறந்த மனிதமும் இருந்தது. அப்படிப்பட்ட நல்ல மனிதனான நீங்கள் இவ்வளவு சிக்கிரம் இவ்வுலகினை நீத்து இறையடி சேர்ந்துவிடுவீர்கள் என நாம் கனவிலும் நினைக்கவில்லை. அதுவும் குறிப்பாக இறுதியாக நானும் இலண்டனில் இருந்து உங்கள் நீண்ட கால நட்பான மணியக்கா ரீச்சர், நடேசன் மற்றும் கதிர் Group அழைப்பில் உங்களுடன் மூன்று மாதங்களுக்கு முன் கதைத்தபோது உணர்ந்திருக்கவில்லை. வசந்தண்ணாவின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனை நாம் அனைவரும் இரங்கி பிரார்த்திக்கின்றோம். உங்களது இவ் இழப்பினை தாங்கும் சக்தியினை அவரது மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் உட்பட அவரது அனைத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் அன்னாரது நண்பர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அளிக்கவேண்டும் என பிரார்த்திக்கும் அதேவேளை அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். சற்குணராஜா, மாலதி, அனிசா, ஜனனி மற்றும் அரிணி, ஜெயலதி சிவேந்திரன், மேலிருந்து என் மாமானாரான நீங்கள் அன்புடன் அழைத்து வந்த உங்கள் நண்பரான மகாலிங்கம் மாஸ்ரரும் மற்றும் விக்னேஸ்வரியும் நிச்சயமாக உங்கள் ஆத்ம சாந்தியினையும் மோட்சத்தினையும் இறைவனுடன் வேண்டிக்கொள்ளுகின்றோம்.🙏🙏🙏