Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 AUG 1950
இறப்பு 13 JUN 2021
அமரர் தம்பிராஜா வசந்தகுமார்
Divisional Engineer, Ceylon Electricity Board, Sri Lanka, Former Director of Computek College, Canada
வயது 70
அமரர் தம்பிராஜா வசந்தகுமார் 1950 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 138 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டன், கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.    

எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?  

 கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்  

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices