

திதி: 03-10-2021
யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Noisy-Le-Grand, Nangis ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை நாகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றெடுத்து ஆளாக்கி பெருவாழ்வு தந்தவரே...!
கற்றவரும் உற்றவரும் போற்ற கருணைமழை பொழிந்தவரே....!
வாழ்வில் வென்றவராய் எமையாக்கி வையகம் போற்ற வாழ்ந்தவரே....!
வாழும் நாட்கள் எல்லாம் ஞாபகத்தில் பூப்பவரே......!
இவ்வுலக வாழ்வை விட்டு இறையுலகம் சென்றாலும்
இக்கணமும் எக்கணமும் எம்மோடு வாழ்கிறீர்கள்
பொய்யில்லா பேரன்பை எண்ண வைத்து
நிழலாக எம் வாழ்வில் நிலைக்கின்றீர்கள்
சொற்களால்
தீபமேற்றி பணிகின்றோம் ஐயனே....!
தொடர் காலம் எல்லாம் உம் திருவடியை
துதிக்கின்றோம் மெய்யனே----!
ஞாபகங்கள் பல நூறு ஓடி வந்து உயிர் தழுவும்
உம் பூமுகத்தை காணாது கண்ணீர் உயிர் கழுவும்
தேர்வலமாய் வந்த உம் பாதங்கள் ஊர்வலமாய்
தினம் தொடரும்
ஊரவரும் உற்றவரும் தினம் பேச மனத்துக்குள் பூ மலரும்
பிள்ளைகளுக்கு பேரன்புத் தந்தையாய்
மருமக்களுக்கு பேரதிசய விந்தையாய்
பேரன் பேத்திகளின் மனம் கனிந்த சிந்தையாய்
பெரு வாழ்வு தந்த பேரொளியே வணங்குகிறோம்
என்றும் கீதையாய்