யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடி யாழ்பாடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 06-02-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(வர்த்தகர்- சிறி முருகன் ஸ்ரோர் தெரணியகல), பரமனாட்சி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற செல்லையா, காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சர்வலோகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், பொன்னையா மரகதம் தம்பதிகளின் அன்புப் பெறா மகளும்,
காலஞ்சென்ற செல்லையா, தம்பிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அரசாங்க அச்சக உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மராஜா(சிவா- கனடா), தமிழ்விழி(சுவாகா- கனடா), பத்மரூபன்(காண்டீபன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அரசபாலினி(கவிதா- கனடா), நகுலேந்திரன்(நகுலன் -கனடா), துஷ்யந்தி(துளசி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, பரமேஸ்வரன், விக்கினேஸ்வரன்(விக்கினேஸ்வரா ஹேட் வெயார் கொழும்பு- 12, நியூகுவாலிற்றி பக்டறி- பேலியாகொட) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகாதேவன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
ராஜசுலோசனா, விஜயராணி(ஓய்வுநிலை கணக்காளர்- தேசிய வீடமைப்பு அதிகார சபை), பவானி(சோதி), காலஞ்சென்றவர்களான நடராஜா, மகேஸ்வரி, ஐயாத்துரை, அன்னம்மா, மாணிக்கம், தையல்நாயகி(நோனா) ஆகியோரின் மைத்துனியும்,
அகரன், பிரவீன், அதினா, ஜர்ஷனா, ஹரிஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-02-2020 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை இன்பம் அந்தியகால சேவை, 70 மானிப்பாய் வீதி, ஆலடிச்சந்தி, ஒட்டுமடம் எனும் முகவரியில் அமைந்துள்ள இன்பம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
rip