4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன்
வயது 52
அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன்
1968 -
2020
சரசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
51
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஜயா வைகுந்தவாசன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாட்கள் தானே...!
எப்படியோ நகர்ந்து போனது!
நாங்கள் மட்டும் அப்படியே
உறைந்து போனதேன்..?
நான்கு வருடம் கடந்ததென்று
தேதி சொல்லுது உறங்க சென்ற நீ
மட்டும் எழும்ப மறந்ததேன்!
நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியானாய்!
இதயங்களெல்லாம் நொறுங்க
இமைகளெல்லாம் நனைய எங்களைத்
தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!
காற்று வந்து காதில் ஏதோ
சொல்லிப் போகுது பார்க்கும் இடமெல்லாம்
உன் குரலே கேட்குது கடந்தகாலம்
எங்களிற்கு கனவாய் போனது
எதிர்காலம் இப்படியேன் இருட்டாய் ஆனது?
எப்பொழுதும் இக்கேள்வியுடன்
ஆறாத்துயருடன் வாழும் என்றும்
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.