1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAR 1968
இறப்பு 14 SEP 2020
அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன்
வயது 52
அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன் 1968 - 2020 சரசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 51 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஜயா வைகுந்தவாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.


நாதியற்று நிற்கும் நாம்
உங்கள் பாசம் இன்றி வாடுகிறோம்
ஆண்டு ஒன்று ஆனதையா
ஆசை கண்கள் உமைத் தேடுதையா
என்ன தவம் நாம் செய்தோம்
எங்கள் தந்தை நீராக!

உங்கள் உறவு மீண்டு மண்ணில் மலரும் வரம் தருவீரா...!!
எமக்கு தந்தையாக நீங்கள் இருந்து
காட்டி சென்ற அன்பை தோற்கடிக்கும் மற்றொரு
அன்பை உலகில் யாரும் தரப்போவது இல்லை
உங்களைத் தவிர

உங்கள் உறவு போல் இனி ஜென்மம்
ஈரெழில் அமைந்திடுமா....!
மீண்டும் மண்ணில் உங்கள் பிள்ளைகளாய்
பாசப் பிணைப்பில் மிதந்திட குழந்தைகள்
போல் ஏங்குகின்றோம்...!

நிலவும் வானை மறந்திருக்கும்
நிமிடம் கூட உங்களை நினையாது
எம்மால் வாழ முடியுமா?

அப்பா, அப்பா விம்முகிறது சோகம்
தவிக்கிறோம் உம் பிரிவால்
துடிக்கிறோம் உம் மறைவால்
தினம்.... தினம்... கண்ணீரால்
நனைகின்றோம் நாதியற்று...!

கவலைகள் அனலாக எரிக்கின்றன...!
வலிகளினால் நெஞ்சம் கனக்கின்றது..!
தாள முடியவில்லை தெய்வமே!
வாருங்கள் எங்கள் வேதனையை போக்கிடுங்கள்

என்னவேண்டுமென்றாலும் உங்களிடம் கேட்பேன்
இன்று எங்கள் அப்பா வேண்டும் என்று கேட்டும்
பிள்ளைகளுக்கு பதில் சொல்லா ஊமையானேன்

எங்கும் உங்கள் பிரமை
அமரும் இடத்தில் உங்கள் கரம்
சாயும் இடத்தில் உங்கள் தோள்
நடக்கும் இடமெல்லாம் உங்கள் நிழல்
உங்களுடன் வாழ்ந்த நாட்கள்
நாளும் என் கண்ணில் மின்னி மின்னி
வருகின்றன
எத்தனை அழகிய நாட்களை உங்கள்
கைபிடித்து கடந்து வந்தேன்
...!

நாம் வாழ்ந்த காலங்கள் பேசிய வார்த்தைகள்
சின்ன சின்ன சண்டைகள் பொய் கோபங்கள் எல்லாம்
கடந்தும் பாசப் பிணைப்பில் என்னை மகிழ வைத்தீர்கள்
உங்கள் பிரிவின் பின் நான் வாழ்வதே ஒரு மாயையாக உள்ளது
உங்களை திரும்ப சந்திக்க என் மனம் ஏங்குகின்றது!
விழாமல் நடப்பேன் என்ற
நம்பிக்கையில் தானோ
என்னை தனியே விட்டிச் சென்றீர்கள்! 

இன்று நான் விழுந்து விழுந்து எழுகிறேன்
என்னைத் தாங்கி கொள்ள வருவீர்களா?
விழுதுகள் தாங்குமுன் ஆலமரம் சரிந்தது!
அந்தி சாயும்முன் எம் சூரியனும் மறைந்ததோ!

பெற்றவர்கள் மனம் வெதும்ப,
பிள்ளைகள் தவிக்க
மனையாள் வகைதெரியாது
பரிதவிக்க எங்கு சென்றீர்கள்?

ஏன் எங்கள் அன்புக் கூட்டை விட்டு
பறந்து சென்றீர்கள்? இன்னுமொரு பிறவி
எனக்கு வேண்டியது இல்லை அப்படி
நிகழுமாயின் உங்கள் அரவணைப்பிலேயே
வாழ ஏங்குகின்றேன்

உங்கள் நினைவுகளுடன் வாழும்
உங்கள் மனைவி, பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 19 Sep, 2020
நன்றி நவிலல் Tue, 13 Oct, 2020