5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 06 JUL 1943
விண்ணில் 11 OCT 2016
அமரர் தம்பிஐயா வேலுப்பிள்ளை
(தங்கராசா- சமாதான நீதவான்)
வயது 73
அமரர் தம்பிஐயா வேலுப்பிள்ளை 1943 - 2016 முள்ளிவாய்க்கால், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா வேலுப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீர் இறையடி எய்தியதை
இன்றும் நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது 
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!

காலத்தால் எமை விட்டு நீர் பிரிந்தாலும்
உம் நினைவு எமை விட்டுப் பிரியவில்லை
நாம் இங்கே தவித்து நிற்க
எமை விட்டுப் போன தெங்கேயோ?

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!

எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
 இதயதுடிப்பு உள்ளவரை
எங்கள் இதய தீபம் நீங்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute