1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிஐயா தர்ஷன்
வயது 36

அமரர் தம்பிஐயா தர்ஷன்
1986 -
2022
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கலட்டியம்பதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா தர்ஷன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-01-2024
எங்கள் ஆசை கடைக்குட்டி
எங்களுடன்
பிறந்த எம் அருமைத் தம்பியே.
எங்கடா போய் விட்டாய்!
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே!
நீ
பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டும் கருணை எங்கே?
எல்லோர் மனதையும் அன்பால் வென்ற
உன்னால் அந்த காலனை மட்டும் ஏன்
வெல்ல முடியாமல் போயிற்று !?
எங்கள்
எல்லோரையும்
தவிப்பில் ஆழ்த்திவிட்டு
அம்மா மடி தேடி சென்று விட்டாயே,
தம்பி உன் ஆத்மா சாந்தியடைய
கலட்டி
வரசித்தி விநாயகரை வேண்டுகின்றோம்.
தகவல்:
சகோதரர்கள்