Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 APR 1935
இறப்பு 24 MAY 2022
அமரர் தம்பிஐயா அருளம்மா
வயது 87
அமரர் தம்பிஐயா அருளம்மா 1935 - 2022 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 13-06-2023

யாழ். சுண்டுக்குழி ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா அருளம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டொன்று ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியயைத் தருமா??

கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம்  முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!

இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா… 

நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா? 

அன்பாலும் அரவணைப்பாலும் எங்களை வளர்த்து
ஆளாக்கி விட்டு நீங்கள் எங்களை
விட்டு பிரிந்து சென்றுவிட்டீர்கள்- என்றும்
எமதுள்ளத்தில் நிரந்தரமாக வாழம் தாயே!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 25 May, 2022
நன்றி நவிலல் Thu, 23 Jun, 2022