Clicky

பிறப்பு 07 NOV 1969
இறப்பு 03 MAY 2026
திரு தம்பையா தயாபரன் (பாபு)
மல்லாவி மத்திய கல்லூரிப் பழைய மாணவர் மற்றும் முன்னாள் ஆசிரியர்
வயது 56
திரு தம்பையா தயாபரன் 1969 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nanthini 08 MAY 2026 United Kingdom

மல்லாவி மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், ஆசிரியருமான சகோதரன் தயாபரனின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையளிக்கின்றது. பள்ளியில் தோழர்களாக இருந்தவர்கள் , உடன்பிறவாச்சோதரர்களானோம். எங்கள் உறவு , குடும்ப உறவாக மலர்ந்தது. ஆண்டுகள் பல கடந்தும் அந்நினைவுகள் பசுமரத்தாணிபோல மனந்தனில் பசுமையாக உள்ளன. தயாபரன் ! மலர்ந்த முகம்! மற்றவர்களுடைய மனம் நோகாமல் நடக்கும் மாண்பு! அளவுகடந்த அன்பு! அத்தனை நற்பண்புகளும் கொண்ட சகோதரனை ,இன்று இறைவன் தன்னருகே அழைத்துவிட்டான்.இச்செய்தி எல்லோரையும் ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதுடன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரின் துயரில் நாங்களும் இணைந்து கொள்கின்றோம்! தங்கராணி குடும்பத்தினர்

Tributes