Clicky

பிறப்பு 07 NOV 1969
இறப்பு 03 MAY 2026
திரு தம்பையா தயாபரன் (பாபு)
மல்லாவி மத்திய கல்லூரிப் பழைய மாணவர் மற்றும் முன்னாள் ஆசிரியர்
வயது 56
திரு தம்பையா தயாபரன் 1969 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

- லக்ஸ்மன்- 09 MAY 2026 France

தயாபரன் சேர்! அழகு, பண்பு, அன்பு, ஆளுமை எல்லாம் நிறைந்த இனிமையான மனிதர். மல்லாவி மத்திய கல்லூரியில்இவருடன் பழகிய நாட்களை என்றும் மறக்க முடியாது. வகுப்பறையில் அனை த்து விதமான மாணவர்களையும் ஆசிரியவான்மையால் அரவணைத்துக் கற்பிக்கும் இவரது ஆற்றலைக் கண்டு வியந்திருக்கிறேன். இவரது வகுப்பு எப்போதும் கலகலப்பாக இருக்கும். நகைச்சுவையுடன் கலந்து வணிகக் கல்வியை மாணவருக்கு ஊட்டும் இவரது கற்பித்தல் பாணி காலங்கள் கடந்தும் கண்முன்னே நிற்கின்றது. எனது குடும்பத்தின் மல்லாவி வாழ்வின் இறுதி காலத்தில் இவரது வீடு எமக்கு அடைக்கலம் தந்தது. இவரது மறைவுச் செய்தியை நம்பமுடியவில்லை. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tributes