2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பையா பரமேஸ்வரன்
ஓய்வுபெற்ற சீமெந்து தாெழிற்சாலையின் ஓடிட்டர் மற்றும் பாராளுமன்ற அமைச்சரவையின் கணக்காளர்
வயது 77
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா பரமேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல் எம்மை காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ எங்கள் துயரம்
மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால்
அப்பா என்று உணர்கின்றோம்...
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்....!!!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, சகோதரர்கள், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.