திதி:04/12/2024
காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா பரமேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்
இப் பூமியில் உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்..
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே!
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே!
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்!
அன்புள்ள அப்பாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் அப்பா!
அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும்
விட்டு விட்டு சென்றுவிட்டீர்களே!
காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது அப்பா!
என்றென்றும் எங்களின் இதயத்தில்
இருப்பீர்கள் அப்பா!
உங்களின் பாத அடி தொடர்ந்து செல்வோம்
உங்களின் நினைவுகளோடு..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!