யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா இன்பராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட தம்பையா இன்பராஜா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 26-09-2020 சனிக்கிழமை அன்று மு.ப 03:00 மணியளவில் அவரதி இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி கடற்கரையில் அஸ்தி கரைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் சபிண்டீகரண கிரியைகளிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Thank you so much for the condolences