5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 APR 1936
இறப்பு 10 DEC 2016
அமரர் தம்பையா இராமநாதன்
பிரபல வர்த்தகர்- பன்னல குருநாகல் றோட் , முன்னாள் ராஜா ஸ்ரோட்டர் உரிமையாளர்
வயது 80
அமரர் தம்பையா இராமநாதன் 1936 - 2016 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா இராமநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

ஐந்து ஆண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்

கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: குகசீலன்(மகன்)