Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 APR 1936
இறப்பு 10 DEC 2016
அமரர் தம்பையா இராமநாதன்
பிரபல வர்த்தகர்- பன்னல குருநாகல் றோட் , முன்னாள் ராஜா ஸ்ரோட்டர் உரிமையாளர்
வயது 80
அமரர் தம்பையா இராமநாதன் 1936 - 2016 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா இராமநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள எங்கள் அப்பாவே...

ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலை
குலைந்து நிற்கின்றோம்!!

அன்பின் உறைவிடமே ஆனந்தத்தின் மறுவடிவே
பாசத்திலும் பண்பிலும் இனியவரே
எங்கள் அன்புக் குலவிளக்கே
பாசத்துடன் நடமாடிய தெய்வமே

பண்போடு கதை சொல்லி அன்போடு தாலாட்டும்
பாசத்தின் பிறப்பிடம் நீங்கள் தாலாட்டு பல உண்டு
தாலாட்டும் தோள்கள் எங்கே!
அரவணைக்கும் கைகள் எங்கே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மகன்