Clicky

22ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 07 MAY 1950
விண்ணில் 25 MAR 2004
அமரர் தையல்நாயகி வைகுந்தராஜா
வயது 53
அமரர் தையல்நாயகி வைகுந்தராஜா 1950 - 2004 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி வைகுந்தராஜா அவர்களின் 22ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு இருபத்திரண்டு
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால் வடியும்
கண்ணீரும் காயவில்லை

பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?

காலங்கள் கடந்து போகும்
ஆனால் கண்மணியே அம்மா
உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று
எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அம்மா...!

ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலாது... 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்