
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி வைகுந்தராஜா அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
குலவிளக்கே எங்கள் அம்மா...
எம்மைவிட்டு எங்குசென்றீரோ...
எங்கள் ஒளி விளக்கே அம்மா…
உன் நினைவால் நித்தம் வாடுகின்றோம்…
சென்ற இடம் கூராயோ
வருடமொன்று சென்றதம்மா-உன் குரல்
கேளாது உன் வாசம் செல்லாது
நம் இல்லம் இருளாய் போனதம்மா...
உன் திருமுகம் பாராமல்
ஏங்கித் தவிக்கின்றோம் அம்மா...
உன் உதட்ரோர புன்னகை காணாது
உள்ளம் வாடிநிற்கின்றோம் அம்மா...
அன்பு காட்டி எம்மை அரவணைத்து- என்றும்
புன்னகைத்தவண்ணம் உறவுகளோடு உறவாடி
ஊர் குடிவிருந்தோம்பிய
உன் உத்தம
பண்புதனைகண்டு
நினைத்தழுதோம் அம்மா
ஆலம் விழுதுகள் போல்
ஆயிரம் உறவு இருந்தும் என்ன?
வேரென நீயிருந்தால் நாங்கள்
வீழ்ந்துவிடாது இருந்தோம்.
வாசம் குன்றாவாழ்வுதந்து வழியெங்கும்
ஒளிதந்து தேசம் புகழும் நிலைதந்த
எங்கள் அம்மாவே...
நாங்கள் உம் ஆத்மா சாந்தியை
வேண்டிநிற்கின்றோம் தாயே...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!