யாழ். கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட தையல்நாயகி கனகரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணி முதல் பி.ப 03:30 மணி வரை Coppice Primary School, Manford Way, Chigwell IG7 4AL, United Kingdom எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவருடைய ஆத்மா எல்லாம் வல்ல பரம்பொருளின் பாதார விந்தங்களைச் சென்றடையப் பிரார்த்திக்கிறோம்.தர்சி குடும்பம்