Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 MAR 1935
இறப்பு 08 APR 2022
அமரர் தையல்நாயகி கனகரட்ணம் (அக்கி)
வயது 87
அமரர் தையல்நாயகி கனகரட்ணம் 1935 - 2022 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி கனகரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டொன்று ஆனதம்மா
ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
விண்ணுலகில் வாழ்ந்திடினும் நினைவுகளால்
எம் மனதில் வாழ்கின்ற எம் குல விளக்கே! தெய்வமே!

பண்ணிய பாவமென்ன உங்களைப்
பறி கொடுத்துத் தவிக்கின்றோம்
பிரிவு என்னும் தண்டனையால்
நிதமும் நிம்மதி இழந்து துடிக்கின்றோம்

மனிதத் துயரங்களுக்குள் அடங்காத துயரமிது
மீட்சி பெற முடியாத சோகமிது
நீங்கள் தொடுவானத்தின் மின்னலல்ல எம்
இதய வான் பரப்பில் ஒளி வீசும் துருவ நட்சத்திரம்

நீங்கள் வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும்
சுமக்கின்றோம், சுமப்போம் உங்கள் நினைவுகளை
எம் இதயப் பெட்டகத்தில்
அடுத்த ஜென்மம் ஒன்று உண்டெனில் நீங்கள்
எம்முடன் இணைந்திட வேண்டுகின்றோம்

காலங்கள் உருண்டோடினாலும் எம்
எண்ண அலைகள் என்றென்றும் எதிரொலிக்கும்
உங்கள் நினைவுகளுடன்

உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டி நிற்கும்
பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்