



கண்ணா #சுவாகன் உனது நிழற்படங்களை முகநூலில் மனம் கொண்டு பார்த்து ரசிப்பேன். ஆனால், ரசித்த அந்தப் படங்களை உனது இறுதி படங்களாகவும் துயர்பகிர்வுப்படங்களாக ஆக்கிச் சென்றுவிட்டாயடா!! சுவாகன் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி. திடீரென முத்தம் தந்து தந்தை முழு மொழிக்கு உயிர்கொடுப்பான்.. குறும்பு விழி அசைவெடுப்பான்..தாய் தந்தை தோள் சாய்ந்து..கட்டிப்பிடி.. என்பான்.. அரும்பு மொழி பேசி தாய்மொழிக்குள்..தந்தையின் கவிப்புலமை வென்று சிரிப்பான்.. சின்னச் சின்ன குழப்படியும்...அவன் செல்லக்கட்டி செய்தொழிப்பான்.. அரிசிப் பல்லு காட்டி புன்னகைத்து..தங்கை பாச பசி என்றும் தீர்ப்பான்... உன் இறந்த நாளில் உனக்கென நான் வடித்த இக்கவியென்றும் முடியாது ஏனெனில்.. முடிவில்லா உணர்வுகளை உன் அன்பானவர்களுக்குள் விதைத்தவன் நீயல்லவா...அன்பு #சுவாகன் உன் ஆத்மா சாந்தியடையட்டும்!! விண்ணுலகத்தில் உன் ஆத்மா அமைதிப்படட்டும்!!! உன் பிரிவால்... இராம.முரளிதரகுருக்கள் குடும்பம். ஜேர்மனி.

அன்னாரின்ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதுடன், குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.