யாழ், நுணாவில் மேற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுரேஸ் தர்மகுலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 20-12-2024
ஒரு தாயின் வயிற்றில்
நாம் ஒன்றாய்ப் பிறந்தோம்
இன்று எம்மை தவிக்கவிட்டு
எங்கே நீசென்றாய்?
உடன் பிறப்பே உன் உறவே
உயர்ந்தென்று இருந்தோம்.
எம் உயிரிலும் உதிரத்திலும்
ஒன்றாய் கலந்திருந்தோம்
பாதியிலே நீ எமைவிட்டுப்பிரிய நாம்
துவண்டு விட்டோம்
புன்னகையோடு காணாமல் போனவனே
கண்ணீரோடு எம்மை தவிக்கவிட்டுச்சென்றாயே
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி எங்கு சென்றாய்!
காலங்கள் தேய்திடுனும்
உன் நினைவுகள் தேய்ந்திடுமோ?
உறவுகள் புலம்புகின்றன
ஊரே உனை நினைத்து உருகுகின்றது
மீண்டும் வாராயோ
உன் பிரிவால் துவண்டு கிடக்கும்
உள்ளங்களுக்கு ஆறுதல் தாராயோ?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
கண்ணீர் அஞ்சலிகள்
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.