

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sankt Ingbert(Saarbrücken) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஷ் பாக்கியநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
தி.தி 24-08-2025
ஈழத்திருநாட்டின் எழில்மிகு புங்கை மண்ணில்
மணமிகு தென்றல் காற்று வீசும் கண்ணகைபுரத்தில்,
பூம்புகார் இல்லத்தில் பாக்கியநாதன் – நீலம்
பிகையின் மூத்த புதல்வனாக
சுரேஷ் பிறந்து வாழ்வைத் தொடங்கினார்.
வேகம், விவேகம் நிறைந்த,
பயம் அறியாத குழந்தையாகவும்,
அன்பும் பண்பும் பாசமும் பொங்க,
அழகும் அறிவும் ஒளிர்ந்த சிறுவனாகவும்
தனது சொந்த ஊரில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.
அதன் பின் ஜெர்மனியிலே
கல்வியைத் தொடர்ந்ததோடு,
தனது கடமையின் மத்தியிலும்
தன் தந்தையின் தொழிலிலும் முழுமனதுடன்
ஈடுபட்டு குடும்பப் பொறுப்பை ஏற்றார்.
நிமிர்ந்த நடை, கம்பீரத் தோற்றம்,
இனிய சொற்பொழிவு – இதனாலே எல்லோரையும் கவர்ந்து,
உறவுகளுடனும் நண்பர்களுடனும் இனிமையுடன் பழகி,
அனைவராலும் பாராட்டப்படும் நற்குணம் கொண்டவராக உயர்ந்தார்.
வசந்தகாலத்து பறவை போல
வாழ்வு வளமாக இருந்த நேரம்,
பருவ வயதில் சண்முகதாசன் – கிருஷ்ணவேணி
தம்பதியரின் மகளான நற் பண்பும், நற்குணமும்,
ஆளுமையும் பொங்கிய சங்கீதாவை
வாழ்க்கைத் துணைவியாக
ஏற்றுக்கொண்டு சிறந்த மருமகனாக விளங்கினார்.
பிரதீபன், சர்மிழியின் மனம் கவர்ந்த மைத்துனராகவும்,
அன்புக்குரிய செல்ல மகனாக
சித்தார்த்தனைப் பெற்று, தாய், தந்தை, தம்பிமாருடனும்,
தங்கைமாருடனும் சீரும் சிறப்புடனும் செல்வச் செழிப்புடனும்
ஆனந்தமாய் வாழ்ந்தார்.
இன்று உன் பிரிவால் மருமகனைத் தேடும் மாமா, மாமியும்,
எங்கள் குடும்பத்தில் ஒருவராக வந்து
மகிழ்ச்சியாக வாழ்ந்த மைத்துனா,
உன்னைப் பிரிந்து வாடும் மைத்துனரும் மைத்துனியும்…
நீ என்னைப் பிரிந்து ஓராண்டு ஆனது.
எனக்கு ஒவ்வொரு பொழுதும் ஓராயிரம்
ஆண்டுகளாக இருக்கின்றது.
நித்தம் நித்தம் உன் நினைவில் வாடும் சங்கீதா,
பசியை மறந்தாள், தூக்கத்தை மறந்தாள்.
ஏன், உன் நினைவால் என்னையும் மறந்தேன்.
ஏக்கத்தில் என் மனம் துடிக்கின்றது.
நீ மீண்டும் வருவாய் என்று நாள்தோறும் என் விழிகள் தேடுகின்றன.
உன் மகன் சித்தார்த் சிந்தும்
கண்ணீரில் நானும் நனைகிறேன்.
அவனின் உள்ளத்து வலிகளுக்கு
ஆறுதல் சொல்ல என்னால் முடியவில்லையே!
அப்பா! காலமெல்லாம் கட்டியணைத்து
முத்தமிட்டு என் மனம் கலங்காமல் வளர்த்தாயே.
இப்போ கண்ணீர் என்னும் கடலிலே என்னையும்,
அம்மாவையும் ஓடமாய் மிதக்கவிட்டு,
நீ மட்டும் காலனிடம் சென்றது ஞாயமோ?
மூத்தவனாய் பெற்றெடுத்து,
முதல்வனாக வளர்த்தேன் மகனே!
உன் அப்பா போனபோது அழுதுநின்றாய்.
இப்போ என்னைத் தவிக்கவிட்டு அவர் பின்னால்
போவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை மகனே!
நீ இன்றி எங்கள் வீடு இருளாகிவிட்டது.
இரவும் பகலும் உன் நினைவில் வாழ்கின்றாள் அம்மா.
தங்கைமார் சுஜியும் சுரேகாவும், மைத்துனர்மாரும்,
மருமக்களும், கங்கைநீர் வழிவது
போல் கண்ணீர் விழிகளில் வழிந்தோட,
தம்பிமார் மதனும் தீபனும் கஜனும்,
மைத்துனிமாரும், பெறாமக்களும் உன் பிரிவால் துயரம்
என்னும் கடலில் நீந்துகிறோம்.
நாம் அனைவரும் உறவிலும் ஒற்றுமையிலும்,
இணைபிரியா பாசத்திலும் கூடி குலாவி மகிழ்ந்து
வாழ்வதில் சிகரத்தில் இருந்தோம்.
இன்று சுரேஷ், நீ இன்றி உன்னை
மறக்க முடியாமல், உன் பிரிவால் நிலை
தடுமாறி கலங்கி நிற்கிறோம்.
எங்கள் எல்லோருடைய நெஞ்சிலும்
நீங்காத நினைவுகளாக வாழும் சுரேஷை
உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் உன் ஆத்மா இறைவன் பாதத்தில் சாந்தியடைய வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
“ Please accept our heartfelt condolences “ From: Sothy mami and Family, Canada
Reste in peace. Kumarathas family from France