அமரர் சுந்தரம்பிள்ளை துவாரகாதரன்
(கரன்)
வயது 49
அமரர் சுந்தரம்பிள்ளை துவாரகாதரன்
1972 -
2021
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து
பக்குவமாய் வழி நடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய்
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தீர்
ஏனோ இறைவன் இடை நடுவில்
பறித்து விட்டான்..
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்.
அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்
பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாக
இருந்த உத்தமரே!!
மண்ணோடு உங்கள்
பூவுடல் மறைந்து விட்டாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
இதயங்களில் இருந்து
ஒருபோதும் மறைவதில்லை. சித்தப்பா
நிம்மாதியாக உறங்குங்கள்
உங்கள் மறைவு எங்களுக்கு கனவாக போகட்டும்
Write Tribute
பெரும் துயரத்தில் வாடும் சுகிர்தா,பிள்ளைகள்,சகோதரங்கள் மற்றும் உறவினர்களின் துன்பத்தில் பங்குபெறுவதோடு எம் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.