Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 21 JAN 1972
உதிர்வு 20 JUN 2021
அமரர் சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் (கரன்)
வயது 49
அமரர் சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் 1972 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

சிந்திடும் புன்னகை சிதந்து மறைந்ததோ
வந்திடும் துயரதை துரத்திடும் பரமனே!
எப்படித்தான் நாம் உமை மறப்போமோ?
பண்பின் சிகரமாய் பாசத்தின் பிறப்பிடமாய்
எல்லோர்க்கும் நல்லவராய் வாழ்ந்து
எல்லோரையும் வாழவைத்தவரே
உங்கள் ஊக்கமும் உழைப்பும் ஓய்வு பெற்றதோ
கதிகலங்கி நிற்குமிந்தக் காலமதைத் தந்தானோ?
எங்குதான் உமைக் காண்போம் இதயமது தவிக்கிறதே...

 எம் நெஞ்சில் நிழலாடும் உங்கள் உருவம்
 எம் மனதில் உருளும் உங்கள் சிரிப்பு
எம் மனதில் நிலைத்திருக்கும் உங்கள் வார்த்தை
எம் மனதை கலைத்திருக்கும் உங்கள் பிரிவு
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: அருமை மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்