திதி: 24-12-2021
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்மா பெருமையினார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னாரது முதலாம் ஆண்டு திவசம் நெடுந்தீவு சுந்தரபதி இல்லத்தில் 24ம் திகதி நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்கள் வீட்டு குல விளக்கே.!!!
அன்புடனும், பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே.!
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது ஏனோ?
எம் உள்ளத்தில் இருக்கும்
தெய்வம் நீ அம்மா எத்தனை
ஆண்டுகள் சென்றாலும், உன் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள வரை வாழுமம்மா?
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்..
குடும்பத்தினர்
......................................................................................
என் இதயத்தில் குடியிருக்கும்
அன்புத் தெய்வமே என் அம்மம்மா!
உன் அன்பு நிறை முகத்தை,
என்று தான்; நான் காண்பேன் ?
கண்ணே மணியே என்று
காதலுடன் கொஞ்சிடுவீர்!
விண் செல்ல முன் உன்னை
ஓடி வந்து பார்த்திடுவேன்!
என்று நான் மனக்கோட்டை
கட்டி பேசாது இருந்திட்டேன்;
அன்று உன் அவலச் செய்தி கேட்டு,
அனல் விழுந்த புழுவானேன்.
அம்மம்மா! அம்மம்மா!
என் அன்பு நிறை அம்மம்மா!
சின்ன வயதில் என்னை வழிநடத்தி,
சீரான வாழ்க்கை எது என்று நான் அறிய;
ஆண்டு தொட்டு எம் மரபின் சிறப்பு ;
பார் போற்றும் பெண்களின் கற்பு ;
எண்ணற்கரிய எத்தனையோ அறிவுரைகள்
எடுத்துக் காட்டியதே உந்தன் நடத்தை!
தாய்க்குத் தாயே, தரணியிலே இலக்கே,
வாய்க்குருசியாக வகைவகையாய் உணவு,
நோய் வந்தால் கண்விழித்து காத்திருந்து
பார்ப்பாயே ! - நீ
போய் விட்டாய் என்று அறிந்து
புழுவாய்த் துடித்தேனே !
அலை கடந்து வந்தாலும்
உன் அன்பு குரல் கேட்கிறதே !
மலை பெயர்ந்து வந்தாலும்
நான் தடம் புரேன் என் தாயே !
நிலையில்லா உலகிலே சங்கடங்கள்
எனைத் தாக்க
சிலையாக நிற்காமல்
சிறப்புடன் வாழ்ந்திடுவேன் !
இறை பாதம் பணிந்து எனக்கு
நிறையாக வழிநடத்திய உன் ஆன்மா
குறையாத அருள் ஈயும் திருப்பாதம்
இறையே ! நீ ஏற்பாயே !
அம்மம்மா !
உன் ஆன்மா சாந்தி ! சாந்தி !
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்