யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்மா பெருமையினார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
"காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது தாயே...
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கறுக்காது தாயே..."
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 05:00 மணியளவில் நெடுந்தீவு மேற்கு தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற உள்ளதால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.