Clicky

பிறப்பு 17 MAR 1938
இறப்பு 04 JUN 2022
அமரர் சுந்தரம் பூதப்பிள்ளை (விஜயரட்ணம்)
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்- கூட்டுறவு திணைக்களம், கல்வி திணைக்களம்
வயது 84
அமரர் சுந்தரம் பூதப்பிள்ளை 1938 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பூமிக்குள் வந்து புண்ணகையோடு வாழ்ந்து சாமியை சந்திக்க சென்ற - எம் பாச அப்பப்பாவே….. எம் சிறுவ முதலே யாம் சீராய் சிறப்பாய் வாழவும் வளரவும் எம்மை சீர்மிகுப் பாதையில் வழிகாட்டிய வழிகாட்டியே…. எம்மை களிப்பூட்ட - நீர் கூறிய கதைகள் இன்னும் எம் காதோரம் இளந்தென்றலோடு இறகுகட்டி இசைபாடி நிற்கின்றன. குடும்பத்தைக் கோவிலாக்கி கோவிலைக் குடும்பமாக்கி குறையற்று வாழ்ந்த இறைப் பற்றாளரே - எம் இதைய செல்லமே !! உறவுக்கு உயிரூட்டி உண்மைக்குச் சான்றாகி உள்ளத்தில் கள்ளமின்றி - எம் உள்ளமெல்லாம் நிறைந்த உத்தம சிற்பியே! பிள்ளையாரை உளமேந்தி பிள்ளைத்தமிழில் பண்ணிசைத்து பிழை களைந்தே வாழ்ந்த - எம் பூதப்பிள்ளை பூ முகமே! மண் கடந்தாலும் - எம் மனம் மறவா மாணிக்கம் நீர் உம் பிரிவு தரும் துயரோடு உயிர் உருகி உள்ளன்போடு எம் இதய அஞ்சலி. நன்றியுடன் பேரக்குழந்தைகள் கஜானன் , அம்ஷலா
Write Tribute