Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 MAR 1938
இறப்பு 04 JUN 2022
அமரர் சுந்தரம் பூதப்பிள்ளை (விஜயரட்ணம்)
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்- கூட்டுறவு திணைக்களம், கல்வி திணைக்களம்
வயது 84
அமரர் சுந்தரம் பூதப்பிள்ளை 1938 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காங்கேசன்துறை குமாரகோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளி, நோர்வே Ulsteinvik ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுந்தரம் பூதப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!

அன்போடு எங்களை எல்லாம் அரவணைத்து
 பாசத்தின் உயிராய் எம்முடன் வாழ்ந்து
எல்லோரையும் அழ விட்டு
மறைந்த எம் தெய்வமே! அப்பாவே!

ஓவ்வொரு விடிப்பொழுதும் நீங்கள் எங்கே என்று
 எமது விழிகள் தேடுகிறது
உங்கள் நினைவுகளுடன் நாமெல்லாம் ஒன்று சேர
 மனம் துடிக்குது மீண்டும் ஒரு முறை
எம்மை கட்டி அரவணைக்க
நீர் எழுந்து வாராயோ அப்பா!

கனவுகள் பல கண்டோம்
எம் அருகில் நீண்ட காலம் இருப்பீர்கள் என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் முன்பே
எம்மை விட்டு ஏன் சென்றீர்கள் அப்பா!!
 இப்பொழுதும் உம் பாசத்திற்காக ஏங்கி
 நாட்கள் எல்லாம் கண்ணீரில் கரைந்தோட
 கலங்கித் தவிக்கின்றோம் அப்பா!!!
 என்றென்றும் உங்கள் நினைவலைகள்
அழியாது எம்முடன் வாழும்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos