ஆயிரம் பேர் ஆறுதல் சொன்னாலும் ஆற்ற முடியா மரணம் ஒன்று தூக்கிவளர்த்த பிள்ளையோடு துருக்கி சென்றது எங்கள் எல்லோரையும் விட்டு இவ்வளவு தூரம் செல்ல தானோ நிறம்மாறாத புன்னகையும் நீளமான நகைச்சுவை பேச்சும் எம்மோடு இருக்க நீங்கள் மட்டும் தனியே சென்றது ஏன் அத்தை???😭 எப்பெரும் சண்டையானாலும் மாமாவை விட்டு விலகாத மனமும் கடைசி ஏழு நாட்களுக்கும் கூட உணவு சமைத்து வைத்த கைகளும் இனி எங்கு தேடியும் கிடைக்காமல் போனதேனோ???? ஈன்றெடுக்கா பிள்ளைகள் இங்கு துயரத்தில் இருக்க ஈசனிடம் என்ன பேச போனீர்களோ??? வாழும் நாட்களில் வழித்துணையாக இருந்த நீங்கள் வருங்காலங்களிலும் கூட இறைவியாய் வழிநடத்த வேண்டும் அத்தை .......... உங்கள் ஆத்மா அமைதி வழி காண இறைவனை வேண்டுகின்றோம் 🕯️🕯️🕯️🕯️