Clicky

தோற்றம் 28 AUG 1934
மறைவு 30 JAN 2021
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி
முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர் யாழ்ப்பாணம், முன்னாள் ஆசிரியர் ரொறன்ரோ கல்விச் சபை
வயது 86
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி 1934 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
28 AUG, 1934
Death
30 JAN, 2021
Late Subramaniyam Sivanayagamoorthy
நல்லாசிரியரை நாம் இழந்து தவிக்கின்றோம்! தீவகம் மற்றும் ஈழத்தாயக,கனேடிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாய் நின்று தமிழிற்கும், தமிழ் கூறு நல்லுலகிற்கும் அருந்தொண்டாற்றிய என் ஆசான் கல்விப்பணிப்பாளர் கலாநிதி சிவநாயக மூர்த்தி அவர்கள் இயற்கையடைந்து விட்டார்கள் என்கின்ற செய்தி மிகுந்த துயரம் தருகின்றது. நெடுந்தீவு தந்த அந்த அற்புத கல்வியாளுமையை இழந்து விட்டோம். சிறுவயதில் நான் பெற்ற நல்லாசிரியர் அவர். நல்ல பண்பாளன். தன் புன்னகையால் எல்லோரையும் வசப்படுத்துகிற நேர்மையாளன். தமிழ் எழுத்தாளர் இணையம் உட்பட வந்த இடத்திலும் அவரோடு கூடப் பயணித்தது நான் பெற்ற வரம். காலப் பள்ளத்தில் வீழ்ந்து,புழுதி மூடிக் கிடந்த மக்களின் வரலாற்றை தோண்டித் துடைத்து எழுதிச் சிறக்கச் செய்த உன்னதர். தன் அரிய நூல்களால் தமிழன்னையைச் சிறக்க வைத்த அரிய படைப்பாளி ! எம் மக்களின், ஊரின் உயர்வை தன் உயிர்மூச்சாய் மதித்த அந்த உன்னதரை என் கண்ணீரால் அஞ்சலிக்கின்றேன். அன்னாரின் பிரிவால் துயருறுகின்ற அவரது அருமைப் பிள்ளைகள்,மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல வல்ல வார்த்தைகள் என்னிடத்தில் இல்லை. “நல்லவர்கள் சாவதில்லை” என் ஆத்மார்த்த அஞ்சலி!
Write Tribute