Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 AUG 1934
மறைவு 30 JAN 2021
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி
முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர் யாழ்ப்பாணம், முன்னாள் ஆசிரியர் ரொறன்ரோ கல்விச் சபை
வயது 86
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி 1934 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 403 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வானை  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற  சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

இரவீந்திரன், புவீந்திரன், சுசீந்திரன், சுகந்தினி. யோகேந்திரன், சுபாசினி, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பராசக்தி(ஓய்வுபெற்ற ஆசிரியை), அன்னபூரணி(இளைப்பாறிய தாதி), காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி, சர்தனா, கிருசாந்தி, ஜீவோதயன், பிரபாலினி, சுரேஸ்குமார், தரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசிங்கம்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்), சண்முகம்(முன்னாள் அதிகார சபை முகாமையாளர்), நடராசலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), இராசலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), யோகலட்சுமி, தியாகலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), கனகலட்சுமி (ஓய்வுபெற்ற உப அதிபர்), மகாலட்சுமி, சந்தானலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை), ஸ்ரீதரலிங்கம், விஜயலட்சுமி(ஆசிரியை), சற்குணராணி, சாரதா, பத்மசேனன், ஜெயமலர்(ஓய்வுபெற்ற விரிவுரையாளர்), சுந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற முதன்மை ஆசிரியர்), சத்தியநாதன், துரைரட்ணம்(ஓய்வுபெற்ற இ.போ.ச- உழியர்), கமலாதேவி, காசிநேசன் காலஞ்சென்றவர்களான செல்வராசா, சச்சிதானந்தம்(முன்னாள் வீடமைப்பு அதிகார சபை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரவிசா, இறசிகா, லக்‌ஷிகா, லக்சன், லஷிகா, சாயிசா, பிரவின், அஸ்வின், அஜித்தன், அனுஸ்கா, ஆரூசன், ஆரியன், நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் நிகழும் பொதுமுடக்க அமுல்படுத்தலின் காரணமாக நேரடி அஞ்சலிநிகழ்வுகள் குடும்ப உறவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையத்தளம் ஊடாக இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் தயவு செய்து கீழ்கண்ட இணைப்பை சனி, ஞாயிறு நிகழ்வுகளின் நேரடி ஓளிபரப்பின் போது உபயோகிக்கவும்.

Web link : https://video.ibm.com/channel/...


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices