Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 28 AUG 1934
மறைவு 30 JAN 2021
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி
முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர் யாழ்ப்பாணம், முன்னாள் ஆசிரியர் ரொறன்ரோ கல்விச் சபை
வயது 86
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி 1934 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து எம் வாழ்வின் விடிவெள்ளியாய் திகழ்ந்த எமது அன்புத் தந்தை அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள், எம்மைவிட்டுப் பிரிந்து இறைவன் திருவடி எய்திய செய்தி கேட்டு அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்க்கும், கனடா, மற்றும் வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமாகவும், மின் அஞ்சல் மூலமாகவும் ZOOM, FACEBOOK தொழில்நுட்பம் ஊடாக எமக்கு அனுதாபம் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், அன்னாரின் உடலுக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தியவர்களுக்கும் மலர்வலையங்கள் அனுப்பியவர்களுக்கும், மலர் மாலைகள் சமர்ப்பித்தோருக்கும், இரங்கல் செய்திகள் மற்றும் கண்ணீர் அஞ்சலிகளை அச்சிட்டு வெளியிட்டோருக்கும், பின்பு நடந்த இறுதி சடங்குகளில் கலந்து கொண்டு அக்கினியில் சங்கமமாகிய பொழுது நீண்ட நேரம் வெளியில் காத்திருந்து அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தும், அன்றைய தினம் இலங்கையில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்திய உற்றார், உறவினர்கள், தந்தையாரின் ஆசிரிய நண்பர்களுக்கும் மற்றும் தந்தையாரின் நினைவாக அன்றைய தினமே கனடாவில் ZOOM, தொழில் நுட்பம் ஊடாக அஞ்சலி நிகழ்வுகளை ஒழுங்கு செய்த சிவபாலு ஆசிரியர் மற்றும் தந்தையாரின் நண்பர்களுக்கும் நெடுந்தீவு மக்கள் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களுக்கும் மற்றும் அஞ்சலி உரைகளை நிகழ்த்திய இலங்கைப் பட்டதாரிகள் சங்கம், எழுத்தாளர் இணைய அங்கத்தவர்கள் மற்றும் உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்களுக்கும், பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்ட கனடா உதயன், ஈழநாடு பத்திரிகை, தமிழர் தகவல், தமிழன் வழிகாட்டி நிர்வாகத்தினருக்கும் மற்றும் சகலவிதமான உதவிகளையும் செய்து எங்கள் துன்பங்களில் பங்கேற்றதோடு, எமது துன்பம் போக்க உதவிய அனைத்து அன்பு உள்ளங்களிற்கும், நினைவு மலரினை வடிவமைக்க உதவிய Fine Print நிறுவனத்திற்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 403 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.