யாழ். பாண்டியன்தாழ்வு சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
“எதையும் தாங்கும் இதயம் எங்கள் ஆசை அப்பா”
“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது அப்பா...
என்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து
கொண்டு இருக்கும் அன்பு அப்பா..”
அம்மா அப்பா என்ற தமிழ்ச் சொல்லால்
உயிரும் மெய்யுமாய் உயிர் மெய்யாய்
எங்களையும் அப்படி உயிர் மெய்யாய் வளர்த்தீர்
எந்த பிறவிக்கும் வாய்க்காத வரம்
உங்களுக்கு மக்களாகப் பிறந்தது
துன்பம் என்ற சொல்லை
நீங்கள் பிரியும் வரை அறியவில்லை
இன்று வரை அப்பா...
எங்கள் இதயம் உங்கள் பிரிவை
ஏற்கவில்லை அப்பா...
நடந்தவை கனவாகப் போகாதோ..?
மீண்டும் ஒருதரம் வாய்விட்டு அழைத்து
எங்களை அரவணைக்க மாட்டீர்களா?அப்பா...
நீங்கள் எங்கள் சிறந்த குரு தெய்வம் வழிகாட்டி அப்பா...
இனி நாங்கள் எங்கே எப்போது
உங்கள் திருமுகத்தைக் காண்போம் அப்பா..
நீங்கள் எங்கள் இதயத்தில் குடிகொண்
தெய்வம் அப்பா..
நீங்கள் இல்லையென்று நாங்கள்
கவலை கொள்ளம்மாட்டோம்
உங்களை எப்போதும் உள்ளம் உயிர்
இவற்றால் உயிர் உள்ளவரை எங்கள்
இதயத்தில் வைத்து தினந்தோறும் பூஜிப்போம் அப்பா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய ஷீரடி சாயி
பொற்பாத கமலங்களில் உங்களைக்
காணிக்கையாக இட்டு தினமும்,
எங்கள் அன்பு மலர்களால் பிரார்த்திப்போம் அப்பா...
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.