

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோமளவள்ளி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெத்தவளே பெயர் சொல்ல வளர்த்தவளே
உத்தமியே ஊர் அறிந்த தெய்வமே
கத்திப் பேசாது காந்தப் பார்வையில்
ஒற்றை அடியேனும் ஓர் பிள்ளை வாங்காது
பக்கம் இருந்து பக்குவமாய் வளர்த்தவளே
அக்கம் பக்கம் தேடுகிறோம்
ஆருயிரே நீ் எங்கே அம்மா
பாசமலர் நீ இன்றி பன்னிரெண்டு
மாதம் ஆனதுவோ
காதோரம் கதை சொல்லும்
வெள்ளை உள்ளமே நீ எங்கே அம்மா
ஆண்டுகள் பல ஆனாலும்
ஆறாது எம்சோகம்
நீண்ட எம் வாழ்வில் நித்திய கவலை அம்மா
உன்னை
நித்தம் நித்தம் தேடுகின்றோம்
நீர் எங்கே போனீர் அம்மா
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!