யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோமளவள்ளி அவர்கள் 23-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரன், ஜானகி(தயா), கோணேஸ்வரன், வனிதா, ஜெகதீஸ்வரன், ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தேவராசா, பங்கயற்செல்வி(பாரதி), ரவி, சிவாஜினி(கீதா), விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தைலம்மா, வைத்திலிங்கம், கந்தையா மற்றும் கனகலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
நாகம்மா, சிவகொழுந்து, புஸ்பம், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கபிலன், ஷர்ளா, மயூரா, ரோபிகா, றபிஞ்சனா, அகிஷன், நிகாசன், லெற்றீஷியா, அலிஷா, சுகன்யா, பவித்திரா, ரிஷபா, இந்துஜா, அதிஸ்தரன், கஜேந்திரன், சஜீதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அதர்ஷா, ஆராதனா, ஆக்ஷயா, அகித், அகிஷா, மாயா, ஹரிஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
புங்கை நகரில் பூத்து
புனிதமாய் வாழ்ந்தவளே
மங்கை அவள் கோமளமே
மணந்தாய் மணியத்தை-சுப்பிரமணியத்தை
மகத்தாக ஆறு மகப்பேறு
மகிழ்வாய் வாழ்ந்து கண்டாய்….
மனம் நிறைந்து
மணந்திட வழியமைத்தாய்…
கொத்தாக பேரன் பேத்தி
பூட்டன் பூட்டி என….
மழலை மொழி கேட்டு
மஞ்சள் தடவி நீராட்டி
கொஞ்சும் கிளி போல்
பஞ்சாய் பேசி வளர்த்தவளே
பாசம் எனும் வார்த்தையில்
ப(பா)ங்கில்லாமல்
நேசம் கொண்டவளே
நெஞ்சம் மறுக்குது அம்மா…
நேசம் நீ இல்லை என்று
இத் தேசத்தில் இனி ……
ஓம் சாந்தி
அன்னாரின் பூதவுடல் 25-03-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிகிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOKஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details