யாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கமலாம்பிகை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழிகள் இரண்டும் சொரிந்தநீர்
இன்னும் வற்றவில்லை தாயே அம்மா
கண்ணீரின் உப்பு கரிப்பு மாறவில்லை
ஆனால் இரண்டாகி விட்டது தாயே அம்மா
எட்டுத் திசைகளிலும் தேடுகின்றோம்
எமை ஆறுதல்படுத்த யாருமில்லை தாயே அம்மா
துன்பங்கள் துயரங்களில் சோர்ந்து வந்து
தலைசாய உன் மடியில்லையே தாயே அம்மா
புல்லாங்குழலாய் நீங்களிருந்து வெற்றுக்காற்றாய்
புகுந்த எங்களை இசையாக்கினீர்களே தாயே அம்மா
உடைந்த சங்காயிருந்த எங்களில் காற்றாய்
புகுந்து ஒலியா வர வைத்த தாயே அம்மா
மண்ணாக நீங்கள் விதையாக புதைந்து எங்களை
மரமாக்கி தோப்பாக்கினீர்களே தாயே அம்மா
பிறந்ததிலிருந்து உடன்பிறப்புகளுடனும் உறவுகளுடனும்
பாசாங்கில்லா பாசம் கொண்ட தாயே அம்மா
திரும்பும் திசையெல்லாம் உன்முகம் பேசும் ஒவ்வொரு
வார்த்தையிலும் உங்கள் குரல் கேட்கிறதே தாயே அம்மா
எங்களை வளம் பெற வளர்தவளே, காத்தவளே
ஒரு வாய் முணுத்தம் கேட்டதில்லை தாயே அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கண்டிப்புடன்
அன்பு கொண்டவளே அன்னையே நாங்கள்
எப்போ காண்போம் இனி???