6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் அன்னம்மா
வயது 74

அமரர் சுப்பிரமணியம் அன்னம்மா
1942 -
2017
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Allschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னம்மா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:23/03/2023.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஆறு
ஓடி மறைந்ததம்மா
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
வாழ்ந்த தேசம் விட்டு
எம்மோடு வாழ வந்த தாயே
வந்தொரு வார்த்தை பேசாது
வானுறைந்து விட்டீர்களே
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
மீண்டும் ஒருமுறை எமக்காய்
வா தாயே.. விடிய விடிய பேச
எவ்வளவோ இருக்கிறதே
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்