திதி:30/05/2026
யாழ். யாமா சந்தி, உடுவில் தெற்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஆண்டு ஒன்று
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
கண்முன்னே வாழ்ந்த
காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
We are nobody to question on God’s will. But it feels hurt that he called you so soon. May your soul rest in peace!