நன்றி நவிலல்
மண்ணில் 04 DEC 1925
விண்ணில் 15 AUG 2021
அமரர் சுப்பிரமணியம் வேலாயுதம்
இளைப்பாறிய நீதிமன்ற இலிகிதர் - மல்லாகம் நீதிமன்றம், பருத்தித்துறை நீதிமன்றம்
வயது 95
அமரர் சுப்பிரமணியம் வேலாயுதம் 1925 - 2021 அல்வாய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அல்வாய் இலகடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சொய்சாபுரம், தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வேலாயுதம் அவர்களின் நன்றி நவிலல்.

அல்வாய் இலகடியில் காலூன்றி
ஆல விருட்சமாய் வேரூன்றி
அனைவரின் மூத்த மகனாய் வழிகாட்டி

பிள்ளைகள் நான்கு பெற்றெடுத்து - பெற்ற
பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் நலன் காணும்
பாக்கியம் பெற்று

உறவுகளென்ற அனைத்தும் இந் ஜென்மத்தில் மட்டுமென
உபதேசங்கள் கொடுத்து, குடும்பத்தின் ஒற்றுமையே
உயிரென அனைவர்க்கும் உணர்த்தி

மாலை சந்தயானின் ஆலய கடனனைத்தும்
மனமுவந்து முன்வந்து முடித்து நின்று -விநாயகனின் பூ
மாலையில் ஈற்றில் பூவாகி, புண்ணியமெய்தி
இறையடி சேர்ந்தீர்கள் ஐயா

இன்பப்பேறு பல பெற்றுயர்ந்தீர், நிம்மதியாய்
இறைவன் காலடி அடைந்து விட்டீர்
இன்மையில் எய்திய புண்ணியங்களும்
இறுதி வரை ஆற்றிய ஆலய பணிகளும்
இவ்வூரையும் எமையும் நெறிப்படுத்தும்
நம்பிக்கையுடன் உம் பாதார விந்தங்களை சரணடைகிறோம்..

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலாம்பிகை அவர்களின் அன்பு கணவரும்,

கணேஷு(கனடா), பத்மாவதி(நியூஸிலாந்து), தவமணி, புஷ்பகாந்தி, காலஞ்சென்ற தங்கராசு, கணபதிப்பிள்ளை, நல்லம்மா ஆகியோரின் மூத்த அண்ணாவும்,

சுகுணா(இலகடி), வசந்தி(அவுஸ்திரேலியா), பிரபாகரன்(நியூஸிலாந்து), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனபாலசிங்கம், நற்குணராஜா, துளசி, வாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துவாரகன், தனுஷன், சுதர்ஷனி, புருஷோத், சஞ்சய், விஜய், தினேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பிரிவினால் நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனுஷன் - பேரன்
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.