



எங்கள் அன்பு நண்பன் சுந்தரமூர்த்தி ( சுந்தா ) இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு அதிர்ச்சி கலந்த சோகத்தோடு இந்த பதிவினை இங்கு அவர் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் பதிவிடுகிறேன். இங்கிலாந்தில் அவர் எங்களோடு வாழ்ந்த காலம் மிக மகிழ்ச்சியானது .. எப்போதும் சிரித்த முகத்துடனும் கோபம் கொள்ளாத மனதுடனும் எல்லோரிடமும் அன்பாய் இருப்பார் … ஒரு நல்ல நண்பனை நாங்கள் இழந்து விட்டோம் இருந்தாலும் அவருடன் இருந்த நாட்களை இனி நினைத்து ஆறுதலடைவோம்.. நல்லவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை என்று ஒரு ஐதீகம்.. அது உணமையோ பொய்யோ தெரியாது .. அப்படியானால் இவர் கெட்டவராக இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் என்று என் மனம் சொல்கிறது …. அவர் பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்க்கும் இத் தருணத்தில் மனதில் தெம்பையும் ஆறுதலையும் கொடுத்து, அவர் ஆத்மா இறையடியில் இழைப்பாறவும் எல்லாம் வல்ல அம்பாளை வேண்டி நிற்கிறேன். அன்பு நண்பன் சுறேஷ் ஆனந்தன் ( கல்லடி மட்டக்களப்பு )

Sundaramoorthy Anna, you will be missed greatly. you're a humble, genuine, dedicated and hardworking person I ever known. Hard to accept your loss. Great loss for, family and UAMC & UGC.