Clicky

பிறப்பு 30 JAN 1944
இறப்பு 26 AUG 2026
திரு சுப்பிரமணியம் சண்முகராசா
புகழ்பூத்த முன்னாள் ஆசிரியர்- யாழ் இந்துக் கல்லூரி
வயது 82
திரு சுப்பிரமணியம் சண்முகராசா 1944 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Subramaniam Sanmugarasa
1944 - 2026

எனக்கு ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் சுப்ரா(பொன்ட்) டியூசன் கிளாசில் சமூகக்கல்வி பயிற்றுவித்த​ ஆசான். எளிதாக​ அனைவருக்கும் விளங்கக் கூடிய​ வகையில் பயிற்றுவித்தவர். எண்பது, தொண்ணூறுகளில் ஜியோகிர​ஃபி சண் மாஸ்டரை தெரியாதோர் அந்நாளில் யாழில் இல்லை எனும் அளவில் பெரும் பெயர் பெற்றவர். அவர் எனக்குப் போதித்த​ சமூகக்கல்வியும்வரலாறும், புவியியலும் என் சிந்தையில் நிறைந்து நான் என் குழந்தைகளுக்கு வீட்டில் கற்பிக்கப் பெரிதும் உதவியது. நன்றி சண் மாஸ்டர் நீங்கள் எனக்கு ஆசிரியராகக் கிடைத்ததற்கு. நான் அவரிடம் பயின்ற சில​ வருடங்களின் பின் நான் தாய்மையடைந்த​ நிலையில் நானும் எனது தாயாரும் கோம்பையன் மணல் சந்தியில் பேருந்துக்காக் காத்திருக்கும் போது இரு சக்கர​ வாகனத்தில் வந்த​ மாஸ்டர் எங்களைத் தாண்டிப் போகும் போது நான் புன்னகைத்தேன். மாஸ்டர் திரும்ப​ வந்து என் நலம் விசாரித்துச் சென்றார். தான் ஆசிரியர் நான் மாணவி என்ற பாகு பாடில்லாத​ பண்பாளர் எங்கள் சண் மாஸ்டர். அவர் என்னை நியாபகம் வைத்திருந்தது எனக்கு ஆச்சரியம். எங்கள் குருவின் இழப்பால் துயருரும் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த​ அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது ஆசானின் நல் ஆத்மா எல்லாம் வல்ல​ பிள்ளையாரப்பாவின் பாத​ கமலங்களில் சரணடைந்து சாந்தி பெற கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். " ஓம் சந்தி சாந்தி சாந்தி"

Write Tribute