Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 30 JAN 1944
இறப்பு 26 AUG 2026
திரு சுப்பிரமணியம் சண்முகராசா
புகழ்பூத்த முன்னாள் ஆசிரியர்- யாழ் இந்துக் கல்லூரி
வயது 82
திரு சுப்பிரமணியம் சண்முகராசா 1944 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் அன்புத் தெய்வமே!
 நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
 நாட்கள் 31 சென்றபோதும்
 எங்கள் இதயமெனும் கோவிலில்
 நிதமும் வாழ்கின்றீர்கள்!
 நீங்கள் எம்முடன் வாழ்ந்த
 நாட்களை தினமும் நினைக்கின்றோம்!

நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
 உணர்கின்றோம்! நீங்கள் எம்மை
 விட்டுப் பிரிந்து எத்தனை நாட்கள் 
 சென்றாலும் உங்கள் நினைவுகள்
 எம்மை விட்டு நீங்காதவை!
 என்றும் அழியாத நினைவுகளோடு!

உங்கள் நினைவு நாளிற்கு எம்
 அளவில்லா அன்பை மலர்
சாந்தியாக செலுத்துகின்றோம்!

அன்புத் தந்தையே!
 உங்கள் ஆத்மா சாந்தியடய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!  

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 58 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.