புன்னகை கொஞ்சும் கோதையிவள் சுப்ரமணியம் பேரின்பநாயகி தம்பதியின் சிரேஸ்ட புத்திரியாக அழகிய வதனத்தினளாய் உதித்தமையால் ரதிவதனி எனும் நாமத்தினை சூடிக் கொண்டவள். அகிலன், மஞ்சுளா, மைதிலி, சுமங்கலி, அரவிந்தை ஆகிய உடன் பிறந்தோருடன் கூடி வளர்ந்து விளையாடி மகிழ்ந்தார். இளம் வயதிலியே தாய்க்கு உதவியாக வீட்டு வேலைகளில் உதவி. தாயார் வெளியூர் சென்றிருக்கும் வேளைகளில் அன்னைக்கு அன்னையாக சகோதரர்களை அன்புடன் அரவணனத்துச் சென்றார். அந்த கலைமகள் கடாட்ஷத்தால் இளங்கலையில் தமிழில் பாண்டித்தியம் பெற்றார். பண்டாரவளை சென்ட் தோமஸ் கல்லூரியில் தமிழ் மொழியையும், சைவசமயத்தையும் போதித்தவர். தனது மென்நகையாலும், இன்மொழியாலும் கற்பித்தலின் திறமையாலும் மாணவர்கள், சக ஆசிரியர்கள், அதிபரிடத்திலும் நல் ஆசிரியை எனும் பெயர் பெற்றவர். இல்வாழ்வில் இணைய வேண்டி இங்கிலாந்தில் குடியேறியவர். பொன்மகள் இவளின் மேன்மையறியாது கை நழுவவிட்ட அறிவிலியும் உண்டு இவ் அவனியில். உதவி கோரிய அனைவருக்கும் தன்னலம் கருதாது உதவி புரிந்தவர். கொடிய நோயினால் நீவீர் எமையெல்லாம் தவிக்க விட்டு இவ்வுலகை நீங்கி ஒரு திங்கள் முடிந்ததம்மா. உமது பிரிவால் துயருரும் உமது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றோம். “மென்மகள் மேன்மகள் பூமகள் இவள்” நல் ஆத்மா எல்லாம் வல்ல இனிய தமிழ் தானளித்த முருகன் பாதகமலங்களில் சரணடைந்து சாந்தி பெற வேண்டுகின்றோம். "ஓம் முருகா சரணம் சரணம் சரணம்" ஆனந்தராஜா குடும்பத்தினர்.
very sad R I P