Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 08 SEP 1954
மறைவு 29 MAY 2022
அமரர் புவனேஸ்வரி சுப்பிரமணியம்
வயது 67
அமரர் புவனேஸ்வரி சுப்பிரமணியம் 1954 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சுப்பிரமணியம் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரை அந்தியேட்டி மடத்தில் நடைபெறும், 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் மதியம் 11:00 மணியளவில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும், தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.