4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவனேஸ்வரி சுப்பிரமணியம்
1954 -
2022
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 13-06-2026
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி சுப்பிரமணியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்பாது
காத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள் அனைவரையும்
விட்டுப் பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
நான்கு ஆண்டுகள்
ஆனதம்மா - ஆனால் உங்கள்
நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை
அன்னையே நம் உள்ளத்தின்
உள்ளே வாழும் உன்னதமான
அன்னையே - உங்கள் உடல்
மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது
எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் உங்கள் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்