Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 11 MAR 1944
இறப்பு 12 FEB 2025
திரு சுப்பிரமணியம் பரமேஸ்வரன் (சிவம்)
இளைப்பாறிய இயந்திரவியல் மேற்பார்வையாளர்- இலங்கை கடற்படை திணைக்களம்
வயது 80
திரு சுப்பிரமணியம் பரமேஸ்வரன் 1944 - 2025 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அகிலம் விட்டு அங்கு சென்று
நாட்கள் 31 ஆகிவிட்டது ஐயா !
ஆறாத்துயரின் அழுத்ததால் அல்லும் பகலும்
அழுகின்றோம் அகிலத்தில் நாமிங்கு!

எம் அன்புத் துணையே ! எம்மவரின் ஆருயிரே !
அன்பு அப்பா உன் அழகுமுகம் பார்க்க
அவதரித்த உம் ஆலம் விழுதுகள்
விம்மி விழுந்து வீரிட்டுக் கிடக்குதையா!
மண்ணில் உன் மதிமுகம் காட்டையா!

எம் பண்பின் பகலவனே
பதைபதைத்து பதறுகின்றோம் நாமிங்கு
உம் பால்வடியும் முகம் காண
துடிக்கின்றோம் இப்போ
தோத்திரத்தால் தொழுது விழுகின்றோம்
தோன்றி ஒருமுறை உன் தூயமுகம் காட்டையா !!!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி வீட்டுக்கிரியை 14-03-2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். பின்னர் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் மதிய போசன் நிகழ்வு நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.